’’உங்கள் ஜனாதிபதி எப்படி இருக்கிறார்..' – முர்முவை உருவ கேலி செய்த மேற்கு வங்க அமைச்சர்!

திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் அகில் கிரி, மேற்கு வங்க மாநிலத்தில் நந்திகிராமில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு எதிராக தரக்குறைவான கருத்துக்களை பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, அனைவராலும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறார்.

குடியரசு தலைவர் திரெளபதி முர்வுவை உருவ கேலி செய்து விமர்சித்ததாக அகில் கிரியின் பேச்சு அமைத்துள்ளது என அனைத்து தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. முன்னதாக மேற்கு வங்க பாஜகவின் மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி, திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் அகில் கிரியை உருக கேலி செய்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, பொது கூட்டத்தில் பேசிய அகில் கிரி, ‘ நான் அழகாக இல்லை என்று சுவேந்து அதிகாரி கூறுகிறார்.. இதை சொன்ன அவர் எவ்வளவு அழகாக இருக்கிறார் பாருங்கள்.. உங்கள் ராஷ்டிரபதி எப்படி இருக்கிறார்? நாங்கள் மக்களை அவர்களின் தோற்றத்தை வைத்து மதிப்பிடுவதில்லை. உங்கள் ஜனாதிபதியின் நாற்காலியை நாங்கள் மதிக்கிறோம் “ என கூறினார்.
image
பாஜகவின் மூத்த தலைவர் சுவேந்து அதிகாரிக்கு பதில் கொடுக்கும் விதமாக அகில் கிரி பேசியதோடு முடித்துயிருக்க வேண்டும். ஆனால் இந்த இடத்தில் குடியரசு தலைவர் திரெளபதி முர்வுவை பற்றி ஏன் பேச வேண்டும் என அனைவராலும் விமர்சிக்கப்ப்பட்டு வருகிறது.

அகில் கிரி பேசிய வீடியோ பதிவை பாஜகவின் பெங்கால் பிரிவு ட்விட்டரில் பகிர்ந்து, ’ முர்மு பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர். முதல்வர் மம்தா பானர்ஜியையும் அவரது கட்சியும் பழங்குடியினருக்கு எதிரானது” என பதிவிட்டப்பட்டுள்ளது.
image

President Droupadi Murmu, hails from the Tribal community. Akhil Giri, TMC Minister of Correctional Homes made objectionable comments about her in the presence of Shashi Panja, another minister from the women’s welfare department

Mamata Banerjee and TMC are anti-tribal. pic.twitter.com/vJNiZ7nBLM
— BJP Bengal (@BJP4Bengal) November 11, 2022

மேலும் பாஜக தலைவர்கள் பலரும், இந்த வீடியோவை பகிர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பழங்குடியினருக்கு எதிரானவர்கள் என பேசிவருகின்றனர்.

இதையும் படியுங்கள் – பில்கிஸ் பானோ வழக்கு குற்றவாளிகளை ’சன்ஸ்காரி பிராமணர்கள்’ என்ற பாஜக எம்எல்ஏவுக்கு சீட்! Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.