எம்பி தேர்தலுக்கு திமுக வியூகம்; வேட்டையை துவக்கிய ஸ்டாலின்!

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் பதவி காலம் முடிந்த பிறகு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் புதிதாக உருவான 9 மாவட்டம் நீங்கலாக பிற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

இதை தொடர்ந்து நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கும் கடந்தாண்டு அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

இதையடுத்து தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சி என்று அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் முயற்சி மேற்கொண்டது.

இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த பிப்ரவரி 19ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தது.

இந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் முக்கியமான பதவிகளை

மற்றும் கூட்டணிக் கட்சிகள் கைப்பற்றின. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் வரும் 2024ம் ஆண்டில் நடைபெற இருக்கிறது.

இதற்கான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என, கடந்த மாதம் 9ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவர்

கட்சியின் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார்.

இதை தொடர்ந்து அடுத்த 2 மாதத்திற்கு உள்ளாக பூத் கமிட்டி அமைக்கும் பணியை முடிக்க வேண்டும் என திமுக தலைமை சார்பில் மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் திமுக வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். 234 சட்டசபை தொகுதிகளில் உள்ள திமுக வாக்குச்சாவடி முகவர்களுடன் காணொலி மூலம் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் வாக்குச்சாவடி முகவர்கள், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். இதில், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற கட்சி நிர்வாகிகளுக்கு முதல்வர்

ஆலோசனை வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.