கேரள மாநிலம் ஆலப்புழா அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் சென்று கொண்டிருந்த சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
தகளி பகுதி வழியாக சென்று கொண்டிருந்த பத்தனம்திட்டா மாவட்ட காவல்துறை தனிப்பிரிவு துணை கண்காணிப்பாளர் சாபுவின் கார், உண்ணி என்பவரின் சைக்கிளில் மீது மோதியது.
இதில், தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரியான சாபு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.