கர்நாடகாவில், தாலிகட்டிய முதல் மனைவியை மறைத்து, ராணுவ வீரர் 2-ஆவது திருமணம் செய்யவிருந்த நிலையில், மண்டபத்திற்கே சென்று முதல் மனைவி திருமணத்தை தடுத்து நிறுத்தினார்.
ஹாசன் பகுதியை சேர்ந்த ராணுவ வீரரான கிரண் குமார்-க்கும், அதே பகுதியைச் சேர்ந்த கணவனை இழந்து வசிக்கும் பெண் ஒருவரும் 6 மாதத்திற்கு முன்பு வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பொம்மனஹள்ளியில் உள்ள ஒரு மண்டபத்தில் கிரண் குமார்-க்கு, வேறொரு பெண்ணுடன் திருமணம் நடைபெறுவதாக தகவலறிந்த அந்த பெண், சம்பவ இடத்துக்குச் சென்று திருமணத்தை நிறுத்துமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால், நடக்கவிருந்த திருமணம் பாதியில் நிறுத்தப்பட்டத்துடன், ஆத்திரமடைந்த ராணுவ வீரரின் உறவினர்கள் அப்பெண்ணை தாக்க முயற்சித்தாக சொல்லப்படுகிறது. தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், பேச்சு வார்த்தை நடத்தி கிரண் குமாரை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.