காதலியை கொன்று இன்ஸ்டாவில் வீடியோ…! இளைஞரின் கொடூர செயல்

ஜபல்பூர்

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் அபிஜித். இவருக்கும் மத்தியப் பிரதேசம் ஜபல்பூரைச் சேர்ந்த சில்பா என்ற இளம் பெண்ணுக்கு சமூகவலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது.

இருவரும் நீண்ட நாட்களாக பழகி வந்த நிலையில், அபிஜித்தின் பிசினஸ் பார்ட்னர் ஒருவருடனும் உடன் சில்பா நெருக்கமாக பழகத் தொடங்கியுள்ளார்.

சில்பா இருவரிடமும் நைசாக ஆசை வார்த்தைகளைப் பேசி ரூ.12 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்ற முயன்றதாக கூறப்படுகிறது.

சில்பாவின் மோசடி வேலை அபிஜித் மற்றும் அவரது கூட்டாளிக்கு தெரியவர அந்த பெண்ணை கொலை செய்ய அபிஜித் திட்டம் தீட்டியுள்ளார்.

இதற்காக ஜபல்பூர் வந்த அபிஜித் அங்குள்ள தனியார் விடுதியில் ரூம் எடுத்து தங்கி சில்பாவை வரவழைத்துள்ளார். அங்கு வந்த சில்பாவை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார்.

ரத்த வெள்ளத்தில் துடிக்கும் சில்பாவை வீடியோ எடுத்த அபிஜித், தன்னை ஏமாற்றியதற்காகத்தான் இந்த தண்டனை செய்தேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.அந்த வீடியோவை அபிஜித் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நிலையில் அது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவத் தொடங்கியது.

இந்நிலையில், கொலை செய்துவிட்டுத் தலைமறைவாக உள்ள அபிஜித்தை தேடிப் பிடிக்க நான்கு சிறப்பு தனிப்படையை ஜபல்பூர் மாவட்ட காவல்துறை அமைத்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.