குஜராத்தில் ஆட்சிக்கு வந்தால் 10 பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. குஜராத் சட்டசபைக்கு டிச. 1, 5ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. குஜராத் சட்டசபை தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. குஜராத்தில் ஆட்சிக்கு வந்தால் 10 பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அகமதாபாத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட்; கடந்த 27 ஆண்டுகால பாஜக ஆட்சியில் நடந்த ஊழல்களை விசாரித்து தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்தார்.
அகமதாபாத்தில் புதிதாக திறக்கப்பட்ட நரேந்திர மோடி விளையாட்டு அரங்கத்தின் பெயர் சர்தார் பட்டேல் விளையாட்டு அரங்கம் என்று மாற்றப்படும் என்றும், அவர் தெரிவித்தார். குஜராத்தில் 3 ஆயிரம் ஆங்கில வழி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், உயர்கல்வி வரை பெண்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என்றும் அசோக் கெலாட் கூறினார். 3 லட்சம் ரூபாய் வரை வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்படும். வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
500 ரூபாய்க்கு எரிவாயு சிலிண்டர்கள், தனியாக வசிக்கும் பெண்கள், வயதான பெண்கள் மற்றும் விதவை பெண்களுக்கு மாதம் தோறும் 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அசோக் கெலாட் கூறினார். 10 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ சிகிச்சை கொரோனாவில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.