குளிர்கால கூட்டத்தொடரை புறக்கணிக்கும் ராகுல் காந்தி – காரணம் இது தான்!

ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரை, இன்று 66வது நாளை எட்டி உள்ளது. அதன்படி மஹாராஷ்டிரா மாநிலத்தின் ஹிங்கோலியில் உள்ள சேவாலா கிராமத்தில் இருந்து, 66வது நாள் யாத்திரை துவங்கி நடந்துவருகிறது.

இந்தநிலையில் டிசம்பர் முதல்வாரம் குளிர்கால கூட்டத்தொடரை நடத்த, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மூன்றாவது வாரத்தில் துவங்கும். ஆனால் இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் சட்டப்பேரவை தேர்தல் காரணமாக குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி டிசம்பர் மாதம் 7ம் தேதி முதல் டிசம்பர் 29ம் தேதி வரை குளிர்கால கூட்டத்தொடர் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. துணை ஜனாதிபதி தான் ராஜ்யசபா தலைவராக உள்ளார். எனவே துணை ஜனாதிபதியாக ஜக்தீப் தங்கர் தேர்வான பிறகு, பதவியேற்கும் முதல் கூட்டத்தொடர் இதுவாகும். மேலும், இந்த கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், இந்தியா – சீனா எல்லை விவகாரம், பொருளாதாரம், வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகிறது.

இந்தநிலையில் அடுத்த மாதம் துவங்க உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில்,
காங்கிரஸ்
நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறும் போது, ‘‘பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, யாத்திரையில் கவனம் செலுத்தும் வகையில், நாடாளுமன்ற கூட்டத்தொடரை புறக்கணிக்க வாய்ப்பு உள்ளது. அதேசமயம் தாழ்த்தப்பட்டவர்கள், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை பாதிக்காத வகையில், ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டை செயல்படுத்த காங்கிரஸ் ஆதரவு அளிக்கும்’’ ஜெயராம் ரமேஷ் கூறியுள்ளார்.

அதேபோல் காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்ய நடந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக, மல்லிகார்ஜூன

கார்கே, ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதனால், காலியாக

உள்ள ராஜ்யசபா எதிர்கட்சி தலைவர் பதவிக்கு, புதிய நபரை தேர்வு செய்யும் பணிகளில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.