சகோதரரை திருமணம் செய்து கொண்டு கனடாவில் வசிக்கும் இளம்பெண்! விமர்சனங்களுக்கு தந்த பதில்


கனடாவில் வசிக்கும் பிரபலமான இளம்பெண்ணொருவர் மாற்றாந்தாய்க்கு பிறந்த மகனும் தனக்கு சகோதரர் முறை கொண்டவருமான இளைஞரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

கனடாவில் வசிக்கும் தம்பதி

இதன் காரணமாக தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
22 வயதான விக்கி பப்பாடகிஸ் என்ற பெண் கிரீஸ் நாட்டை சேர்ந்த பிரபல மொடல் ஆவார்.

இவருக்கும் மட் கியாட்பிஸ் (22) என்ற இளைஞருக்கும் திருமணம் முடிந்து தம்பதி கனடாவில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் விக்கி பப்பாடகிஸ் கடுமையான கிண்டலுக்கும், விமர்சனத்துக்கும் ஆளாகியுள்ளார்.

சகோதரரை திருமணம் செய்து கொண்டு கனடாவில் வசிக்கும் இளம்பெண்! விமர்சனங்களுக்கு தந்த பதில் | Married Lifestyle Canada Couple

Captura: @vass.iliki)/TikTok/Vicky Papadakis

சகோதரர் முறை கொண்டவரை மணந்ததால் எழும் விமர்சனம்

ஏனெனில் அவர் திருமணம் செய்திருப்பது தனது மாற்றாந்தாய் மகனை! அதாவது சகோதரர் முறைகொண்டவரை!
இதையடுத்து பலரும் சமூகவலைதளங்களில் இது சட்டப்படி சரியா அல்லது தவறா, ஏன் இப்படியான திருமணம் செய்ய வேண்டும் என விமர்சித்துள்ளனர்.

இதற்கு பதில் அளித்த விக்கி பப்பாடகிஸ், நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.
எங்கள் மீதான மோசமான விமர்சனங்களுக்கு தலைவணங்கப் போவதில்லை.
நாள் முடிவில், இதுவெல்லாம் எங்கள் வாழ்க்கையை எந்தவிதத்திலும் பாதிக்காது, இல்லையா? என தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.