சிறந்த 10 இந்திய திரைப்படங்கள்: விமர்சகர்கள் கூட்டமைப்பு வெளியிட்டது
சர்வதேச திரைப்பட விமர்சகர்கள் கூட்டமைப்பு இதுவரை வெளியான இந்திய படங்களில் இருந்து 10 படங்களை தேர்வு செய்து அண்மையில் அந்த பட்டியலை வெளியிட்டது. அந்த பட்டியலில் தமிழ் படங்கள் எதுவும் இடம்பெறவில்லை. தென்னிந்திய படங்களில் அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கிய மலையாள படமான எலிப்பத்தாயம் படம் 4வது இடம் பிடித்துள்ளது. கிரீஷ் காசர்வல்லி இயக்கிய கன்னட படமான கடாஷ்ரத்தா 5து இடத்தை பிடித்துள்ளது. மற்ற அனைத்து இடத்தையும் பெங்காலி மற்றும் ஹிந்தி படங்கள் பிடித்துள்ளன. சத்யஜித் ரே இயக்கிய பதேர் பாஞ்சாலி முதல் இடத்தையும், ரமேஷ் சிப்பி இயக்கிய ஷோலே 10வது இடத்தையும் பிடித்துள்ளது. முழுபட்டியல் வருமாறு
1. சத்யஜித் ரே இயக்கிய பதேர் பாஞ்சாலி,( பெங்காலி, 1955)
2. ரித்விக் கட்டக் இயக்கிய மேகே டாக்கா தாரா ( பெங்காலி, 1960)
3. மிருணாள் சென் இயக்கிய புவன் ஷோம் (ஹிந்தி 1969)
4. அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கிய எலிப்பத்தாயம் (மலையாளம், 1981)
5. கிரீஷ் காசர்வல்லி இயக்கிய கடாஷ்ரத்தா (கன்னடம், 1977)
6. எம்.எஸ்.சத்யு இயக்கிய கார்ம் ஹவா (ஹிந்தி, 1973)
7. சத்யஜித்ரே இயக்கிய சாருலதா (பெங்காலி, 1964) சத்யஜித் ரே
8. ஷ்யாம் பெனகல் இயக்கிய அங்கூர் (ஹிந்தி, 1974).
9. குரு தத் இயக்கிய பியாசா (ஹிந்தி, 1937).
10. ரமேஷ் சிப்பி இயக்கிய ஷோலே (ஹிந்தி, 1975)