சென்னை: சென்னை மாநகராட்சி சுகாதார அதிகாரி மற்றும் மண்டல சுகாதார அதிகாரி ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிறப்பு, இறப்பு பதிவேட்டில் மகேஸ்வரி என பதிவான பெயரை மாற்றி பதிய வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகேஸ்வரி என்பவர் தொடர்ந்த வழக்கு 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.