சென்னை மெட்ரோ ரயில் பணி: ஆழ்வார்பேட்டை – பாரதிதாசன் சாலை பகுதிகளில் 3 ஆண்டுகளுக்கு போக்குவரத்து மாற்றம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக ஆழ்வார்பேட்டை, பாரதிதாசன் சாலையில் 3 ஆண்டுகளுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக ஆழ்வார்பேட்டை, கவிஞர் பாரதிதாசன் சாலையை சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, கவிஞர் பாரதிதாசன் சாலையை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் தொடர்பான விவரம்:

  • டிடிகே சாலையில் செமியர்ஸ், சாலை சந்திப்பில் இருந்து கவிஞர் பாரதிதாசன் சாலை சந்திப்பு வரை ஒரு வழிப்பாதையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • சி.பி. ராமசாமி சாலையில் சி.வி.ராமன் சாலை சந்திப்பில் இருந்து ஆர்.ஏ.புரம் 2வது பிரதான சாலை சந்திப்பு வரை ஒரு வழிப்பாதையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அண்ணா சாலையில் இருந்து கவிஞர் பாரதிதாசன் சாலை வழியாக டி.டி.கே சாலைக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் மாற்றுப் பாதையில் அனுப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது.
  • இதன்படி, மாநகர பேருந்துகள் திருவள்ளுவர் சாலை, எல்டாம்ஸ் சாலை வழியாகவும், இலகுரக வாகனங்கள் சீதம்மாள் காலனி 1-வது பிரதான சாலை வழியாகவும் செல்லலாம்.
  • டிடிகே சாலையில் இருந்து ஆழ்வார் பேட்டை சிக்னலுக்கு செல்ல வேண்டிய மாநகர பேருந்துகள் திருவள்ளுவர் சாலை மற்றும் எல்டாம்ஸ் சாலை வழியாகவும், இலகுரக வாகனங்கள் சீதம்மாள் காலனி 1வது பிரதான சாலை (அ) சி.வி.ராமன் சாலை வழியாக மாற்று பாதையில் செல்லலாம்.
  • டிடிகே சாலையில் உள்ள ஆழ்வார்பேட்டை மேம்பாலத்திலிருந்து வரும் மாநகர பேருந்துகள் நேராக சி.பி.ராமசாமி சாலை வழியாக செமியர்ஸ் சாலைக்கு செல்லலாம்.
  • லஸ் சர்ச் சாலை வழியாக ஆழ்வார்பேட்டை சிக்னலுக்கு செல்ல வேண்டிய மாநகர பேருந்துகள் டிடிகே சாலை, ஆழ்வார்பேட்டை மேம்பால சர்வீஸ் சாலை வழியாக செல்லலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.