ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள கப்ரென் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு விரைந்த வீரர்கள், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள் வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். வீரர்கள் கொடுத்த பதிலடியில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். அவன், பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பை சேர்ந்த கம்ரான் பாய் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த பகுதியில் வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.