தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.2.22 கோடி வசூல் ஆகியுள்ளது என கோயில் நிர்வாகம் தகவம் தெரிவித்துள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் உண்டியல் பணம் எண்ணும் பணி கோயில் வளாகத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. 2 நாட்கள் எண்ணப்பட்ட உண்டியலில் இருந்து ரூ.2.22 கோடி பணம், 1,193 கிலோ தங்கம், 15 கிலோ வெள்ளி பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.