நானா உங்கள அப்படி பேச சொன்னேன்? – சதீஷிடம் சீறிய தர்ஷா குப்தா
விரைவில் வெளியாகவுள்ள 'ஓ மை கோஸ்ட்' திரைப்படத்தில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன், சதீஷ், நடிகை தர்ஷா குப்தா மற்றும் டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து உட்பட பலர் நடித்துள்ளனர். அண்மையில் அப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட சன்னி லியோன் தமிழ்நாட்டு பெண் போல் புடவையில் வந்திருந்தார். ஆனால், கோயம்புத்தூரை சேர்ந்த தர்ஷா குப்தாவோ கிளாமரான உடையில் வந்திருந்தார்.
இதுகுறித்து நிகழ்ச்சியின் போது பேசிய சதீஷ், 'சன்னி லியோன் மும்பையிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்திருக்காங்க. அவங்க டிரெஸ்ஸ பாருங்க. தர்ஷா குப்தா கோயம்புத்தூர்ல இருந்து வந்திருக்குது அதோட டிரெஸ்ஸயும் பாருங்க' என்று கிண்டலடித்திருந்தார். இதனை பாடகி சின்மயி, இயக்குநர் நவீன் ஆகியோர் கடுமையாக கண்டித்து பதிவிட்டிருந்தனர்.
தொடர்ந்து இந்த விஷயம் சர்ச்சையாகி பலரும் சோஷியல் மீடியாவில் சதீஷை விமர்சித்து வந்தனர். இந்நிலையில், தர்ஷா குப்தா தான் தன்னை அப்படி பேச சொன்னதாக சதீஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இதற்கு பதிலளித்த தர்ஷா குப்தா, 'நல்லா கதைய மாத்துறீங்க. உங்கள நானா அப்படி பேச சொன்னேன். யாராவது ஸ்டேஜ்ல என்ன பத்தி அசிங்கமா பேசுங்கன்னு சொல்லுவாங்களா? எனக்கும் அன்னைக்கு ரொம்ப ஹர்ட் ஆச்சு. ஆனா, அப்ப பெருசா எடுத்துக்கல. இப்ப இப்படி சொல்றது நல்லா இல்ல' என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இதனையடுத்து மேலும் பலர் சதீஷை திட்ட ஆரம்பித்தனர். எனவே, சதீஷ் தான் வெளியிட்டிருந்த அந்த வீடியோ பதிவை நீக்கிவிட்டார்.