அவனியாபுரம்: மதுரை அவனியாபுரம் வழியாக அயன்பாப்பாகுடி பாசன கால்வாய் செல்கிறது. தொடர்மழை காரணமாக இந்த கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர்மழை காரணமாக, அவனியாபுரம் அருகே உள்ள வெள்ளக்கல் கழிவுநீர் கண்மாயும் நிரம்பி வழிகிறது. இந்த கழிவுநீர், அயன்பாப்பாகுடி பாசன கால்வாயில் கலக்கிறது. இதனால் அயன்பாப்பாகுடி கால்வாயில் பஞ்சு போன்று வெண்மை நிறத்தில் நுரை நுரையாக பரவி வருகிறது. இதனால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
இதனால் சுகாதார சீர்கேடு மேலும் அருகில் உள்ள விமான நிலைய சாலையில் நுரை பறந்து செல்கிறது. இதனால் அந்த வழியாக டூவீலர்கள் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகும் ஏற்பட்டுள்ளது. ஏதேனும் விபரீதம் நிகழும் முன்பு விரைந்து நடவடிக்கை எடுக்க அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.