இதேபோல் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்
நைஜீரியாவில் சாலை விபத்து அதிக நிகழ்வதால், அவற்றை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது
நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லொறி விபத்துக்குள்ளானதில் 12 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கோகி மாநிலத்தின் Ofu கவுன்சில் பகுதியில் பெட்ரோல் டேங்கர் லொறி ஒன்று சென்றுகொண்டிருந்தது.
லொறியானது முக்கிய சாலை ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பிரேக் செயலிழந்துள்ளது.
இதனால் தாறுமாறாக ஓடிய லொறி நெடுஞ்சாலையில் வாகனங்கள் மீது மோதியதில் தீப்பற்றி எரிந்தது.
மேலும், வழியில் வந்த கார்களை நசுக்கியது. இந்த விபத்தில் தீயில் சிக்கிய பலர் பரிதாபமாக உயிரிழந்ததாக கோகி பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இதுவரை 12 பேர் இந்த விபத்தில் பலியானதாகவும், மேலும் சிலர் காயமடைந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
AP Photo
விபத்து நடந்த சாலை சுற்றி வளைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் பணியில் பாதுகாப்பு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக கோகி பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
AP Photo
AP Photo/Odogun Samuel Olugbenga