அபுஜா: நைஜீரியாவில் ‘காஸ் டேங்கர்’ லாரி வெடித்து 12 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் கோகி மாகாணத்தில் உள்ள சாலையில் நேற்று முன் தினம் இரவு ஒரு காஸ் டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அதன் பிரேக் செயலிழந்து முன்னால் சென்ற வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் காஸ் டேங்கர் வெடித்து பயங்கர தீப்பிடித்தது. இந்த விபத்தில் இரு வாகனங்களிலும் இருந்த 12 பேர் அதே இடத்தில் உடல் கருகி உயிரிழந்தனர்; காயம் அடைந்த ஆறு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement