மண்டல மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 16-ம் தேதி மாலை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படும் என தேவசம்போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 17-ம் தேதி மண்டல பூஜை தொடங்குகிறது. இதை முன்னிட்டு, வருகிற 16-ம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. அன்றிலிருந்து 41 நாட்கள் வரை கோவில் நடை திறந்திருக்கும்.
கொரோனா பரவல் காரணமாக கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பக்தர்கள் வருகையும் குறைந்திருந்தது. இந்நிலையில், இந்த முறை கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு தனிப்பட்ட கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை.
இதனால், இந்த முறை ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுவாமி ஐயப்பனை தரிசிக்க ஆன்லைனின் முன்பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.