தமிழகம் வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, – ஆகியோருக்கு மறைமுகமாக மெசேஜ் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுகவில் 4 ஆண்டுகளுக்கு பிறகு, ஒற்றைத் தலைமை உருவாகி உள்ளது. ஜூலை 11 ஆம் தேதி, சென்னை வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக, பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்
தேர்வு செய்யப்பட்டார். இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த
மற்றும் அவரது ஆதரவாளர்கள், அதே நாளில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதனால் அதிருப்தி அடைந்த
, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, தேர்தல் ஆணையம், நீதிமன்றம் ஆகியவற்றில் முறையீடு செய்துள்ளார். எனினும் இதுவரை நடைபெற்ற சட்டப் போராட்டங்களில் எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கி இருக்கிறது. அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில், டெல்லி பாஜக மேலிடமும் மவுனம் காத்து வருகிறது.
இந்த பரபரப்பான அரசியல் நிகழ்வுகளுக்கு இடையே, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் மதுரைக்கு நேற்று வந்தார். மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் நரேந்திர மோடியை, எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அருகருகே நின்று வரவேற்றனர். அப்போது இருவரையும் ஒன்றாக சேர்ந்து வரும்படி, பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், மதுரை விமானத்தில் இருந்து ஆந்திராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்ட போது, தமிழக அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள், ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். அப்போதும் கூட, ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அருகருகே நின்றனர்.
இருவரும் கொடுத்த பூங்கொத்துகளை பிரதமர் நரேந்திர மோடி ஒன்றாக சேர்த்து வாங்கினார். இதன் மூலம், கட்சி நலன் கருதி, ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என அவர் மறைமுகமாக அறிவுறுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேச திட்டமிட்டு உள்ளார்.