பாட்னா, :பீஹாரில், பல்லி விழுந்த மதிய உணவைச் சாப்பிட்ட 200 மாணவ – மாணவியர் வாந்தி எடுத்து மயங்கினர். அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பீஹாரின் பாகல்பூரில் உள்ள அரசுப் பள்ளியில், நேற்று முன்தினம் மதிய உணவை சாப்பிட்ட 200 மாணவ – மாணவியர், சிறிது நேரத்திலேயே வாந்தி எடுத்து மயங்கி சரிந்தனர்.
அவர்கள், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து சில மாணவர்கள் கூறுகையில், ‘ஒரு மாணவியின் உணவில் பல்லி இறந்து கிடந்தது.
‘அதை தலைமை ஆசிரியரிடம் காண்பித்தோம். இது பல்லி அல்ல; கத்தரிக்காய் எனக்கூறி உணவை சாப்பிடச் சொல்லி கட்டாயப்படுத்தினார்’ என்றனர்.
இந்த சம்பவம் குறித்து, பாகல்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ‘மாணவர்கள் கூறியபடி கட்டாயப்படுத்தியிருந்தால், தலைமை ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என போலீசார் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement