உலக வங்கியின் கடனுதவியின் கீழ் ,ஒரு தொகை யூரியா உரத்தை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் நாளை மறு தினம் 14ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
22,000 மெட்ரிக் தொன் கொண்ட இந்த கப்பல் மலேசியாவிலிருந்து இலங்கைக்கு வருவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
2022/2023 பெரும்போக, நெல் மற்றும் சோளச் செய்கைக்காக யூரியா உர கொள்வனவிற்காக 105 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. அந்தக் கடனுதவியின் கீழ், பெறப்படும் இரண்டாவது தொகுதி உரம் இதுவாகும். இதற்கு முன்னர். 13 ஆயிரம் மெற்றிக் தொன் யூரியா உரம் நாட்டிக்குக் கிடைத்துள்ளது.
யூரியா உரத்தின் முதல் தொகுதி சீனாவில் இருந்தும், இரண்டாவது தொகுதி உரம் மலேசியாவிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. பெரும்போகத்திற்காக யூரியா உரம் இறக்குமதி செய்யப்படுகிறது.
566 விவசாய சேவை மத்திய நிலையங்களின் ஊடாக யூரியா உர விநியோகம் முன்னெடுக்கப்படுகின்றன. விதைக்கப்பட்டு, 14 நாட்களுக்குள் பயன்படுத்தப்படும் யூரியா உரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
இம்முறை பெரும் போகத்திற்காக கொள்முதல் செய்யப்ட்டுள்ள யூரியா உரத்தின் மொத்த அளவு ஒரு இலட்சத்து 20,000 மெட்ரிக் தொன்.