தமிழகம் முழுக்க பெரும்பாலான மாவட்டங்களில் இரண்டு நாள்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளன. குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்துள்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று 29 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், வேலூர், மயிலாடுதுறை, நீலகிரி,
திருவாரூர், தஞ்சை, கரூர், புதுக்கோட்டை, சேலம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தருமபுரி, திருவண்ணாமலை, கோவை, திண்டுக்கல், தேனி, திருப்பத்தூர், சிவகங்கை, ராணிப்பேட்டை, மதுரை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் (நவம்பர் 12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகனமழை வெளுத்து வாங்கியுள்ளது. சீர்காழியில் மட்டும் 44 செ.மீ மழை பதிவாகியுள்ளது.