காசியாபாத்: உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவியை அதே பள்ளியின் மேலாளர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட பள்ளியின் மேலாளரான ஷஹாதத் என்பவர், பள்ளி நேரம் முடிந்ததும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டல் விடுத்துள்ளார்.
பள்ளி மேலாளரின் அத்துமீறலால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, நடந்த விஷயத்தை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய், இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் தலைமறைவான ஷஹாதத்தை தேடி வருகின்றனர்.