மூணாறு: மூணாறு பகுதியில் பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பதுக்கடி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவு காரணமாக வட்டவடை சாலையில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது.