ராதா கிருஷ்ணா டிவியில் ஒளிபரப்பாகிறது

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தியேட்டர்களில் வெளியாகி கவனம் பெறாமல் சென்ற படம் ராதா கிருஷ்ணா. குழந்தைகளுக்கு பிடித்தமான முறையில் உருவாகி இருந்த இந்த படம் பெரிய அளவில் விளம்பரம் செய்யப்படததால் பெரிதாக பேசப்படவில்லை.

சிறுவன் கிருஷ்ணா (ஆதித்யா), யானை (ராதா) இருவரும் உடன்பிறவா சகோதரர்களாக வளர்கிறார்கள். பல வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் வனத்துறையினர் யானையை அழைத்துச் செல்கிறார்கள். கிருஷ்ணா தனது சகோதரனும் நண்பனுமாகிய யானையை நினைத்து மிகவும் ஏங்குகிறான். பின்னர் யானையை தேடி காட்டுக்குள் தன்னந்தனியே பயணத்தை மேற்கொள்கிறான். ராதாவும் கிருஷ்ணனும் மீண்டும் சந்திக்கிறார்களா என்பதே கதையின் முடிவு.

அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்டிருந்த இந்த படத்தில் அழகான இயற்கை காட்சிகள், காட்டுக்குள் வரும் பிரச்சினைகளை காட்டி இருந்தது. புகழ், லிவிங்ஸ்டன் மற்றும் மனோபாலா உள்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படம் நாளை ( நவம்பர் 13) மதியம் 2 மணிக்கு கலர்ஸ் தமிழில், தொலைக்காட்சியில் முதல் முறையாக ஒளிபரப்பாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.