லண்டனில் உணவுப் பொருட்களின் கடுமையான விலையேற்றத்தினால் உணவு வங்கி துவங்கி ஏழைகளுக்கு உணவு வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வல்லரசு நாடான இங்கிலாந்தில் தற்போது பால் உள்ளிட்ட உணவு பொருட்களின் விலையேற்றத்தினால் ஏழை, நடுத்தர மக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், லண்டனில் அறக்கட்டளை மூலமாக உணவு வங்கி ஏற்பாடு செய்து ஏழைகள், முதியவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.
முன்பதிவு செய்து உணவு பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், கடந்தாண்டில் நிதி உதவி வழங்கியவர்கள் கூட தற்போது உதவி பெறும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் உணவு வங்கி மேலாளர் சார்லாட்டி ஒயிட் (Charlotte White) தெரிவித்துள்ளார்.