நேபாள நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம், டெல்லி மற்றும் அதை சுற்றி உள்ள மாநிலங்களில் உணரப்பட்டது.
நம் அண்டை நாடான நேபாளத்தில் இன்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோவில் 5.4 ஆக பதிவாகி உள்ளது. இது குறித்து நேபாள நிலநடுக்க கண்காணிப்பு மையம் கூறுகையில், பஜாங் மாவட்டத்தில் உள்ள படதேவால் என்ற இடத்தை சுற்றி நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், உள்ளூர் நேரப்படி இரவு 8.12 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும், அதாவது இந்தியாவில் இரவு 7.57 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும் தெரிவித்து உள்ளது. கடந்த மூன்று நாட்களில் நேபாளத்தில் ஏற்பட்ட ஐந்தாவது நிலநடுக்கம் இதுவாகும்.
நேபாள நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம், டெல்லி, நொய்டா மற்றும் குருகிராம், ஹரியானா மற்றும் உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உணரப்பட்டது. இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் நெட்டிசன்கள் பதிவிட்டனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலர் உயிரிழந்தனர். அந்த நிலநடுக்கமும் டெல்லி மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.