”வீடு திருட்டு விவகாரம் குறித்து அவதூறு பரப்பினால்..” – நடிகை பார்வதி நாயர் எச்சரிக்கை

நடிகை பார்வதி நாயரின் வீட்டில் நடந்த திருட்டு விவகாரம் குறித்து தவறான தகவல்களை பரப்பினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவரது தரப்பில் எச்சரிக்கை நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நடிகை பார்வதி நாயரின் வீட்டிலிருந்து கைக்கடிகாரங்கள், லேப்டாப், செல்போன் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் திருடு போயின. இது தொடர்பாக நடிகை பார்வதி நாயர் அவருடைய வீட்டில் பணிபுரியும் நபர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார். காவல்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டிருக்கிறது.

image

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக செய்தி வெளியிட்டிருக்கும் சில ஊடகங்கள் நடிகை பார்வதி நாயரின் புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கும் கற்பிக்கும் வகையில் ‌அவதூறான செய்திகளை வெளியிட்டிருக்கிறது. இதுபோன்ற செய்திகளை தொடர்ந்து வெளியிட்டால், வெளியிடும் அனைத்து ஊடகங்கள் மீதும் அவதூறு வழக்கு மற்றும் அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என பார்வதி நாயர் தரப்பில் எச்சரிக்கை‌ விடுக்கப்பட்டிருக்கிறது.

image

இதனிடையே நடிகை பார்வதி நாயர் வீட்டில் பணிபுரிந்த நபர், வீட்டிலிருந்து ஆறு லட்சம், மூன்று லட்சம் என பல லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரங்களையும், லேப்டாப், செல்போன் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களையும் திருடி இருக்கிறார் என்பதும், அவர் மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.