வேலூர் அருகே குடிநீர் தொட்டி கட்டுமான பணியின் போது விபத்து: 2 பேர் உயிரிழப்பு

வேலூர்: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் குடிநீர் தொட்டி கட்டுமான பணியின் போது தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர். குடிநீர் தொட்டியில் சென்டரிங் பிரிப்பதற்காக உள்ளே சென்ற 3 தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தனர். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.