சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே பகடப்பாடி பகுதியை சேர்ந்த 60 வயது மூதாட்டி தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக புளியங்குறிச்சி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் (22 ) என்ற இளைஞர் மூதாட்டியை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று அருகில் உள்ள சோள தோட்டத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அதிர்ச்சியடைந்த மூதாட்டி உதவி கேட்டு சத்தம் போட்டுள்ளார்.
ஆட்கள் வருவதை அறிந்த ஸ்ரீதர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். பின்னர் மூதாட்டியை மீட்ட அப்பகுதி மக்கள் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து ஜெயலட்சுமி ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஸ்ரீதரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ஸ்ரீதர் தலைவாசல் அருகே உள்ள தனியார் கல்லூரியில் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தற்போது நெல் அறுவடை இயந்திரத்தில் டிரைவராக வேலை செய்து வருவதாகவும், சம்பவத்தன்று மூதாட்டியை தூக்கிச் சென்று வாலிபர் பலாத்காரம் செய்ய முயன்றதும் தெரியவந்தது.
இதனையடுத்து ஸ்ரீதர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 22 வயது இளைஞர் 60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in