எதையாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்பது தற்போது தலைமுறையினருக்கு எளிதாகிவிட்டது. அதில், சில விஷயங்கள் இயல்புக்கு மாறாக இருக்கலாம் அல்லது மிகவும் வினோதமாகவும் இருக்கலாம். அந்த வகையில், அமெரிக்க கால்பந்து வீரர் மசாயா லெஜண்ட் ஆண்ட்ரூ என்பவரின் வினோதமான முடிவும் பலரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது.
ஆண்ட்ரூவுக்கு ஏற்கெனவே இரண்டு முறை திருமணமாகி, எட்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், தற்போது மூவருக்கும் மற்றொரு குழந்தையும் பிறக்க உள்ளது. எனவே, இதனை சரிகட்ட மூன்றாவதாக திருமணம் செய்ய உள்ளதாக அவர் தெரிவித்திருப்பதுதான் பலரையும் வியப்படைய செய்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்ட ஸ்டெப்பனி என்ற பெண்ணை ஆண்ட்ரூ 2014ஆம் ஆண்டு முதலாவதாக திருமணம் செய்துகொண்டார். பின்னர், இவருக்கு இடையேயும் விரிசல் ஏற்பட்டு, ஒவ்வருக்கொருவர் பேசாமல் இருந்தனர். அந்த வேளையில், ஆண்டரூவின் வாழ்வில் ரோசா என்ற பெண் என்ட்ரி கொடுத்தார்.
மேலும் படிக்க | ‘உயிர் உங்களுடையது தேவி…’ ஆபத்தான குற்றங்களை தடுக்கும் உலகின் அழகான போலீஸ் இவரா…
இதையடுத்து, ரோசாவுடனான காதலை, தனது மனைவி ஸ்டெப்பனியிடம் ஆண்ட்ரூ தெரிவிக்க, 2019ஆம் ஆண்டு முதல் ஸ்டெப்பனி-ஆண்ட்ரூ-ரோசா ஆகிய மூவரும் இணைந்து வாழ்ந்து வருகின்றனர்.
ஆரம்பத்தில், ஸ்டெப்பனிக்கு இந்த நடைமுறை சிக்கல் இருந்துள்ளது. திடீரென தனது கணவருடன், மற்றொரு பெண்ணையும் சேர்த்து அவரால் பார்க்க முடியவில்லை. அதுமட்டுமில்லாமல், ஒரே வீட்டில் ஜோடியாக வாழ்வது என்பதை அவரால் ஏற்றுக்கொள்ள கடினமாக இருந்தது. அவர், மூவராக சேர்ந்து வாழவதற்கு இரண்டு – மூன்று ஆண்டு காலம் எடுத்துள்ளது.
தற்போதைய உறவு குறித்து ஸ்டெப்பனி மற்றும் ரோசா கூறும்போது, தங்களை இருபால் ஈர்ப்பாளராக அடையாளப்படுத்திக்கொண்டனர். இதுகுறித்து ஸ்டெப்பனி கூறும்போது,”கணவருடன் பெண் ஒருவரும் இருப்பதில் எனக்கு பிரச்சனை இல்லை. குறிப்பாக, காதலியாக எனக்கு தேவைப்படுவதை கொடுக்கும் பெண் இருக்கும்போது எனக்கு கவலை” என்றார்.
இங்கு ரோசாவோ,”எனக்கு ஆணை விட பெண்தான் அதிக ஈர்க்கிறார்கள். ஆனால், ஆண்ட்ரூ தன்னை எதிர்பால் ஈர்ப்பாளராகவே அடையாளப்படுத்திக்கொள்கிறார்” என்றார். தற்போது, தங்களுக்கு மேலும் ஒரு குழந்தை வர இருப்பதால், மற்றொரு பெண்ணையும் எங்களின் குடும்பத்திற்குள் கொண்டுவரலாம் என்ற சிந்தனையில் உள்ளோம்” என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க | ஆடையின்றி படுத்திருந்த உயர் அதிகாரி… படுக்கையில் அலறிய பெண் – கடைசியில் ட்விஸ்ட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ