தன்னுடைய மனைவியை வேறொரு நபருக்கு கணவரே விற்ற அதிர்ச்சி சம்பவம் ஒடிசாவில் நிகழ்ந்துள்ளது.
ஒடிசா மாநிலம் கலஹண்டி மாவட்டத்தில் உள்ள நார்லா பகுதியை சேர்ந்தவர் கிரா பெருக் (வயது 25). இவர் சமீபத்தில்தான் பூர்ணிமா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கிரா பெருக் தனது மனைவி பூர்ணிமாவை அழைத்துக்கொண்டு வேலை தேடி செல்வதாகக் கூறி டெல்லிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வேறொரு நபருக்கு பூர்ணிமாவை, தன்னுடைய மனைவி என்று கூட பாராமல் பணத்திற்காக விற்றுள்ளார் கீரா பெருக். அவரிடம் இருந்து பெரும் தொகையை வாங்கிக் கொண்டு பறந்து விட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பூர்ணிமா தனது உறவினர்களுக்கு போன் செய்து நடந்த சம்பவம் குறித்து கண்ணீர் மல்க தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக பெண்ணின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி கீரா பெருக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். விற்கப்பட்ட பெண் தனது தந்தைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து உண்மை சம்பவம் அம்பலமாகி உள்ளது.
இதையும் படிக்கலாமே: திருமணமான மூன்றே மாதத்தில் கணவனுக்கு ‘ஸ்லோ பாய்சன்’ கொடுத்த மனைவி.. அதிரவைத்த சம்பவம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM