வெளிநாட்டு நட்புறவுக்கான சீன மக்கள் சங்கத்தின் (CPAFFC) தலைவர் லின்
சொங்டியன் ( Lin Songtian) இலங்கைக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இவர் நேற்று (12.11.2022) இலங்கை வந்தடைந்துள்ளார்.
லின் சொங்டியனின் இலங்கை விஜயம்
அவர் இலங்கையில் பிரதமர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்திப்பார் என
எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் அவரின் பயண நோக்கம் இன்னும் தெரியவரவில்லை. லின் சொங்டியன் 1986 இல் சீனாவின் வெளிநாட்டு சேவையில் பிரவேசித்தார்.
இந்நிலையில், 2020 முதல், தூதர் லின் சொங்டியன், வெளிநாட்டு நட்புறவு
நாடுகளுடனான சீன மக்கள் சங்கத்தின் (CPAFFC) தலைவராக பதவி வகித்து வருகிறார்.