உதகை அருகே முத்தோரைப் பகுதியில் உள்ள வானிலை ஆராய்ச்சி மையத்தில் 4 சிறுத்தைகள் நடமாடும் சிசிடிவி காட்சியால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
உதகை அருகே உள்ள முத்தோரைப் பகுதியில் சோலைகள் அதிக அளவு நிறைந்து காணப்படுகிறது, இங்கு காட்டெருமை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அதிக அளவு உள்ளன,
இந்நிலையில். நேற்றிரவு இங்குள்ள வானிலை ஆராய்ச்சி மைய வளாகத்திற்கு வந்த இரண்டு சிறுத்தைகள் மற்றும் 2 கருஞ்சிறுத்தைகள் நீண்ட நேரம் இப்பகுதியில் சுற்றித் திரிந்தது இங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் 4 சிறுத்தைகளின் நடமாட்டம் இப்பகுதி மக்களை அச்சமடையச் செய்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM