சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் கடந்த 24 மணி நேரத்தில் 17 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் 17 செ.மீ மழை பதிவாகி உள்ளது. அடுத்தபடியாக திருத்தணியில் 13 செ.மீ மழை பதிவாகி உள்ளது. ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் 11 செ.மீ மழையும், மதுராந்தகம் மற்றும் திண்டிவனத்தில் 11 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.
இந்நிலையில் இன்று (நவ.13) தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், நாளை முதல் வரும் 17ம் தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.