டைம் ட்ராவலர் ஒருவர், உலகத்தின் முடிவைக் காட்டுவதற்கான ஆதார புகைப்படம் ஒன்று தன்னிடம் உள்ளதாக பரபரப்புத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
புகைப்பட ஆதாரம்
பொதுவாக டைம் ட்ராவலர் என்று தங்களை அழைத்துக்கொள்வோர், தாங்கள் எதிர்காலத்துக்குப் பயணம் செய்ததாகவும், அப்போது உலகில் என்ன நடந்தது என்று தாங்கள் பார்த்துவந்ததாகவும் கூறுவதுண்டு.
ஆனால், Edward என்னும் ஒருவர், தான் 3,000 ஆண்டுகள் எதிர்காலத்தில் பயணித்ததாகவும், 5,000ஆவது ஆண்டில் உலகம் எப்படி இருந்தது என்பதை புகைப்படம் எடுக்க, அங்கிருந்த சிலர் தன்னை அனுமதித்ததாகவும் கூறி, புகைப்படம் ஒன்றையும் காட்டுகிறார்.
Credit: ApexTV/Youtube
தான் சென்ற காலகட்டத்தில் பல இடங்கள் தண்ணீருக்கு அடியில் மூழ்கியிருந்ததாக தெரிவிக்கும் Edward, ஆகவே, மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கப்பல்களை செய்துகொள்ளவேண்டும் என எச்சரித்துள்ளார்.
தண்ணீருக்கடியிலிருந்த அமெரிக்க நகரம்
தான் ஒரு பெரிய மர மிதவை மீது நின்றுகொண்டிருந்ததாக தெரிவிக்கும் Edward, நான் மட்டுமல்ல, அங்கிருந்த வீடுகள், கட்டிடங்கள் எல்லாமே மரத்தால் அமைக்கப்பட்டு, மர மிதவைகளின் மீதுதான் இருந்ததாகவும் கூறியுள்ளார்.
அதற்குப் பிறகுதான், தான் நிற்கும் நகரம் எது என கவனித்துப்பார்த்த Edward, அது லாஸ் ஏஞ்சல்ஸ் என தெரிந்துகொண்டதாகவும், முழு லாஸ் ஏஞ்சல்சும் தண்ணீருக்கடியில் இருந்ததாகவும் கூறி பீதியைக் கிளப்பியுள்ளார்.
அங்கு வாழ்ந்த மக்களிடம் தான் பேசியபோது, உலகம் அழியத் துவங்குவதற்குக் காரணமாக இருந்தது புவி வெப்பமயமாதல்தான் என அவர்கள் தெரிவித்ததாகவும்,புவி வெப்பமயமாதல்தான் உலகத்தையே மூழ்கடிக்கும் அளவுக்கு பெருவெள்ளம் ஏற்படக் காரணமாக இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார் Edward.
அத்துடன், தண்ணீருக்கடியில் மூழ்கியிருக்கும் நகரம் ஒன்றின் புகைப்படத்தையும் Edward காட்டியுள்ளதுதான் ஹைலைட்!
Credit: ApexTV/Youtube