உலகின் மக்கள் தொகை இன்னும் சில நாட்களில் 800 கோடியாக அதிகரிக்க உள்ளதாக ஐநா.வின் அறிக்கையில் தெரிவிக்கப்ப்டடுள்ளது.
நவம்பர் 15ம் தேதி உலக மக்கள் தொகை 8 பில்லியன் இலக்கை எட்டுகிறது. தற்போது சீனா முதலிடத்தில் இருந்தாலும், 2030ம் ஆண்டுக்குள் மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்தில் இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் நைஜீரியா நான்காம் இடத்திலும் பாகிஸ்தான் 5வது இடத்திலும் மக்கள் தொகை பெருக்கத்திற்கு காரணமாக உள்ள நாடுகளாகும். இதே போல் சராசரி மனித ஆயுள் காலமும் சில ஆண்டுகள் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.