ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்து எலான் மஸ்க் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆட்குறைப்பு, வேலை நேரத்தை அதிகரித்தல் போன்ற அமைப்பு ரீதியான மாற்றத்தை தொடர்ந்து, ட்விட்டரால் அங்கீகரிக்கப்படும் பயனர்களுக்கு வழங்கப்படும் ப்ளூ டிக் (Blue Tick) நடைமுறை அனைவருக்கும் வழங்கப்படும் என்றும், அதற்கு எட்டு அமெரிக்க டாலர்கள் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
நிதி பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு, அந்நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கையை எலான் மஸ்க் முடுக்கிவிட்டார். இதனால், கடந்த நவ.4ஆம் தேதி அன்று இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் ட்விட்டர் பணியாளர்கள் தங்களின் வேலையை இழந்தனர்.
44 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து வாங்கிய ட்விட்டர் நிறுவனத்தில், நாள் ஒன்றுக்கு 4 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படுவதன் காரணமாக ஆட்குறைப்பில் ஈடுபட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி, ‘கடினமான உழைப்பவர்களுக்கு, ஜெயிக்க நினைப்பவர்களுக்கு ட்விட்டர் சிறப்பான இடம், ஆனால், அப்படியில்லாதவர்களை நாங்கள் புரிந்துகொள்கிறோம், ட்விட்டர் உங்களுக்கான இடமில்லை’ என தெரிவித்திருந்தார்.
மொத்தம் ட்விட்டரின் 7,500 பணியாளர்கள் பணியாற்றி வந்த நிலையில், சுமார் 3,700 பேரை அன்றைய தினம் பணிநீக்கம் செய்ததாக தெரிவிக்கப்பட்டது. அதிலும், குறிப்பாக ட்விட்டரின் பொறியாளர்களின் மேலாளர் ஒருவரிடம், அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதை எலான் மஸ்க் உதவியாளர்கள் கூறியுள்ளனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பணியாளர், திடீரென அலுவலகத்தில் இருந்த குப்பை தொட்டி ஒன்றில், வாந்தி எடுத்தத்தாக அங்கிருந்தவர்கள் ஊடங்களிடம் தெரிவித்துள்ளனர். எலான் மஸ்க் கொடுத்த கடினமான பணிகள் அனைத்தையும் முடித்து, அலுவலகத்திலேயே தூங்கிய காரணத்தால் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
அந்த சமயத்தில், திடீரென அதிர்ச்சி செய்தியை கேட்டவுடன் வாந்தி எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பணிநீக்க நடவடிக்கை பணியாளர்களை எந்தளவிற்கு பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளது என்பதற்கும், எலான் மஸ்க் ட்விட்டரில் செய்துவரும் அதிரடிகளின் விளைவுகளுக்கும் உதாரணமாக அமைகிறது.
எலான் மஸ்கின் அதிரடி அறிவிப்புகளில் ஒன்றான, ட்விட்டர் ப்ளூ டிக் வெரிபிக்கேஷனுக்கு 8 அமெரிக்க டாலரை கட்டணமாக வசூலிப்பது. இந்த நடைமுறையால், அதிக பொய் கணக்குகள் கட்டணம் பெற்று, ப்ளூ டிக் வாங்கிக்கொண்டதால், ட்விட்டர் ப்ளூ சேவையை ட்விட்டர் தற்போது நிறுத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | 9ஆவது குழந்தை வரப்போகுது… அதனால் இன்னொரு பொண்ணு வேணும் – அடம்பிடிக்கும் பிரபலம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ