இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற்ற 21 வயதிற்குட்பட்டோருக்கான அடுத்த தலைமுறை ஏடிபி டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் அமெரிக்க வீரர் பிராண்டன் நகாஷிமா சாம்பியன் பட்டம் வென்றார்.
எதிர்த்து விளையாடிய ஜிரி லெஹெக்காவை 4-3, 4-3, 4-2 என்ற செட் கணக்கில் வெறும் 80 நிமிடங்களில் பிராண்டன் நகாஷிமா வீழ்த்தினார்.
பிராண்டன் நகாஷிமா கடந்த ஆண்டு அரையிறுதிப் போட்டியுடன் வெளியேறிய நிலையில் தற்போது சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.