தொழில்நுட்ப பராமரிப்பு பணிகளுக்காக இன்று இரவு முழுவதும் யாரும் சிம்மிற்கு ரீச்சார்ஜ் செய்ய முடியாது என ஏர்டெல் நெட்வொர்க் அறிவித்துள்ளது.
முக்கியமான ஏர்டெல் நெட்வொர்க் அப்டேட்டிற்காக, நெட்வொர்க் அனுபவத்தை மேம்படுத்த, தொழில்நுட்ப பராமரிப்புச் செயல்பாட்டைத் திட்டமிடுவதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, இன்று (13.11.22) இரவு 11 மணி முதல் 14ஆம் தேதி காலை 7 மணி வரை ரீசார்ஜ் சேவைகள் கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஏர்டெல் பேக் முடிவடையகின்ற நிலையில் இருக்கும் பட்சத்தில், முன்கூட்டியே ரீசார்ஜ் செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், அழைப்புகள், SMS மற்றும் டேட்டா சேவைகள் தடையின்றி செயல்படும்.
தற்போதே ரீசார்ஜ் செய்ய விரும்பினால், i.airtel.in/RechTN1 என்ற லிங்கில் சென்று ரீச்சார்ஜ் செய்துகொள்ளலாம் என ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.
newstm.in