ஒரே பதிவால் ஹீரோவான இந்திய வீரர்! பாகிஸ்தான் பிரதமருக்கு கொடுத்த தரமான பதிலடி


இந்திய அணியை வீழ்த்திய இரு அணிகளில் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மோதுகின்றன – பாகிஸ்தான் பிரதமர்

பாகிஸ்தான் பிரதமருக்கு பதிலடி கொடுத்த இர்பான் பதானை இணையத்தில் கொண்டாடும் இந்திய ரசிகர்கள்   

இந்திய அணியை கிண்டல் செய்து பதிவிட்ட பாகிஸ்தான் பிரதமருக்கு இர்பான் பதான் தரமான பதிலடி கொடுத்துள்ளார்.

மெல்போர்னில் இன்று நடக்கும் உலகக்கோப்பை டி20 தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டியை குறிப்பிட்டு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆகையால் இந்த ஞாயிற்றுக்கிழமை 152/0 vs 170/0 இது நடக்கிறது’ என பதிவிட்டார்.

அதாவது, கடந்த 2021ஆம் டி20 உலகக்கோப்பை லீக் சுற்றில், இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 152 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

அதேபோல், இந்த ஆண்டு உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 170 ஓட்டங்கள் எடுத்து இந்திய அணியை அரையிறுதியில் வென்றது.

இதனை குறிப்பிடும் வகையில் இந்திய அணியை வீழ்த்திய இரண்டு அணிகள் இன்று மோதுகின்றன என அவர் கூறியிருந்தார்.

அவரது இந்த பதிவிற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் பதில் ட்வீட் செய்தார்.

Shehbaz Sharif

AFP

அவர், ‘இதுதான் உங்களுக்கும், எங்களுக்கும் உள்ள வித்தியாசம். எங்கள் மகிழ்ச்சியில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மற்றவர்களின் பிரச்சனைகளில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். அதனால் தான் உங்கள் நாட்டை மேம்படுத்துவதில் உங்களுக்கு கவனம் இல்லை’ என பதிலடி கொடுத்தார்.

Irfan Pathan

இர்பான் பதானின் இந்த பதிவு இந்திய ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து இர்பான் பதானை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.