கணவருக்கு சூனியம் வைக்க ரூ.59 லட்சம் செலவு செய்த மனைவி; விசாரணையில் திடுக்கிடும் தகவல்

தன்னுடைய ஆண் நண்பருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்க தடையாக இருக்கும் கணவருக்கு சூனியம் வைக்க மனைவி ரூ.59 லட்சம் வரை செலவு செய்த சம்பவம் மும்பையில் அரங்கேறி உள்ளது.

மும்பை அருகே உள்ள அந்தேரி பகுதியை சேர்ந்த 39 வயதான தொழிலதிபர் ஒருவருக்கு 38 வயதில் ஒரு மனைவி உள்ளார். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், தொழிலதிபரின் மனைவி 13 வருடங்களுக்கு முன்பு பரேஷ் கோடா என்பவரை காதலித்துள்ளார். திருமணத்திற்கு பிறகும் அவர்களது திருமணத்தை மீறிய உறவு தொடர்ந்து உள்ளது. இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து காதலை வளர்த்து வந்துள்ளனர். இவ்விவகாரம் நாளடைவில் தொழிலதிபருக்கு தெரியவரவே அவர் மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் அதை பொருட்படுத்தாமல் பரேஷ் கோடா உடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார் அந்த பெண்.  

image
இதனிடையே, கடந்த மாதம் தனது அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவதற்காக தனது வீட்டில் உள்ள அலமாரியில் வைத்திருந்த சுமார் ரூ. 35 லட்சம் பணம் காணாமல் போனதைக் கண்டு தொழிலபதிபர் திடுக்கிட்டார். இதுகுறித்து மனைவியிடம் கேட்டபோது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். தொடர்ந்து வீட்டில் இருந்த நகைகள் காணாமல் போனதை கண்டுபிடித்த தொழிலதிபர், நடந்த சம்பவம் அனைத்தையும் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

image
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொழிலதிபர் மனைவியை கைது செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதில் மனைவிக்கும் தொழிலதிபருக்கும் அடிக்கடி சண்டை வருவதால் விரக்தியடைந்த அவர், முன்னாள் காதலனுடன் சேர தடையாக இருக்கும் கணவர் தன் பேச்சை கேட்பதற்காக சூனியம் வைக்க ஜோதிடரான படால் சர்மா என்பவரை அணுகி உள்ளார். இவர் தொழிலதிபரின் மனைவிக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக அறிமுகமாகியிருக்கிறார். ஜோதிடரும் இந்த பிரச்சினையை தீர்ப்பதாக உறுதியளித்திருக்கிறார்.

image
தொழிலதிபர் மனைவிக்கும் ஜோதிடருக்கும் இடையில் முன்னாள் காதலன் பரேஷ் கோடா இடைத்தரகாக செயல்பட்டுள்ளார். ஜோதிடர் படால் சர்மா சூனியம் செய்வதற்கான கட்டணமாக தொழிலதிபர் மனைவியிடருந்து பணம் மற்றும் தங்க நகைகளை பறித்துள்ளார். இதுவரை ரூ.59 லட்சம் வரை தோதிடர் பறித்தாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து ஜோதிடர் படால் சர்மா, கள்ளக்காதலர் பரேஷ் கோடா ஆகியோர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்கலாமே: திருமணமான மூன்றே மாதத்தில் கணவனுக்கு ‘ஸ்லோ பாய்சன்’ கொடுத்த மனைவி.. அதிரவைத்த சம்பவம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.