கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றத் திரைப்படம் `காந்தாரா’. ரிஷப் ஷெட்டி, இப்படத்தை இயக்கி, நடித்தும் இருந்தார். கன்னட மொழியில் வெளியான இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து தமிழ், தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்பட்டு அக்டோபர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் ரிஷப் ஷெட்டி, தனக்குக் கன்னட மொழியில் மட்டுமே படம் எடுக்க விரும்பம் என்று தெரிவித்திருக்கிறார்.
இது பற்றி பேசியுள்ள அவர், “தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமல்லாமல் பலரிடமிருந்து படம் பண்ணுவதற்காக அழைப்புகள் வந்தன. ஆனால், நான் கன்னடத்தில் மட்டுமே படம் எடுக்க விரும்புகிறேன்” என்றார். மேலும், “பி.காம் முடிந்து இரண்டு முறை எம்பிஏ முயற்சி செய்தும் அதை முடிக்க முடியவில்லை” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.