காரைக்கால்: காரைக்காலில் கடல் சீற்றம் மற்றும் மழை காரணமாக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்திவைக்கப்பட்டது. உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு மின் ஏற்றுமதி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.