எகிப்து நாட்டில் நைல் நதி கால்வாயில் பஸ் கவிழ்ந்து 21 பேர் பலியாகினர்.
வடகிழக்கு ஆப்ரிக்க நாடான எகிப்தின் டகாலியா மாகாணத்தில் சென்ற பஸ், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, நைல் நதியில் இருந்து செல்லும் கால்வாயில் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் இருந்த 21 பயணியர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். காயம் அடைந்த 30 பயணியர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement