திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 2 வயது ஆண் குழந்தையை கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்த தாயின் ஆண் நண்பரை போலீசார் கைது செய்தனர்.
காங்கரனந்தலைச் சேர்ந்த ஜெயசுதா என்பவர் கணவரை பிரிந்த நிலையில் 2வயது குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்த போது மாணிக்கம் என்பவருடன் முறையற்ற உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திருமணமான மாணிக்கம் தன் குடும்பத்தை பிரிந்து ஜெயசுதாவுடன் சேவூரில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 21ந்தேதி குடிபோதையில் வீட்டிற்கு வந்த மாணிக்கம் ஜெயசுதாவுடன் வாக்குவாதம் செய்து விட்டு அருகில் இருந்த கட்டையால் குழந்தையை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.