விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்து, தற்போது இந்நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது. கடந்த மாதம் 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக்பாஸ் -6 நிகழ்ச்சியிலிருந்து இதுவரை மூன்று போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர். முதலில் ஜி.பி.முத்து தானாகவே முன்வந்து விலகினார், அவரை தொடர்ந்து அந்த வாரம் டான்ஸ் மாஸ்டர் சாந்தி குறைந்த வாக்குகளுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அதன்பின்னர் கடந்த வாரம் அசல் கோளாறு அவர் செய்த சில கோளாறான செயல்களால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து வாராவாரம் நடக்கும் வெளியேற்று படலத்தில் இந்த முறை பிக்பாஸ் வீட்டில் விக்ரமன், அசீம், ஆயீஷா, மஹேஸ்வரி, ராம், தனலட்சுமி, ADK போன்ற போட்டியாளர்கள் உள்ளனர். இதிலிருந்து இன்று மஹேஸ்வரி வெளியேறியுள்ளார். ஷாந்தி, அசல் கோளார், ஷெரினாவை தொடர்ந்து நான்காவது போட்டியாளராக மஹேஸ்வரி எவிக்ட் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையில் இன்று ஒளிப்பரப்பாக உள்ள பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கமல்ஹாசன் முன்னிலையில் தனலட்சுமிக்கு குறும்படம் ரெடியாக இருக்கிறது. அதாவது கடந்த வாரம் நடந்த டாஸ்க் இல் பெரும்பாலான இடங்களில் தனலட்சுமி சண்டை மட்டுமே ஈடுபட்டிருந்தார். அந்தவகையில் ஸ்வீட் ஃபேக்டரி டாஸ்கில் அதிக பணம் வைத்திருந்ததால் தனலட்சுமி அந்த போட்டியில் வெற்றி பெற்றார். இதனால் அடுத்த வார நாமினேஷன் லிஸ்ட் இல் இருந்து தனலட்சுமி காப்பாற்றப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில் இந்த டாஸ்க் தொடர்பான ஒரு குறும் படம் கமல் முன் இன்று போடப்பட்டது. அதில் தனலட்சுமி திருட்டு தானமாக தான் அந்த பணத்தை சம்பாதித்தார் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் இதற்கு இது தொடர்பாக பேசிய கமல் இந்த போட்டியின் நியாயமான்அ மற்றும் உண்மையான வெற்றியாளர் விக்ரமன் தான் என்ற கூறி, தனலட்சுமி இடமிருந்து வெற்றி பறிக்கப்பட்டது. அடுத்த வாரம் நாமினேஷனில் இருந்து விக்ரமன் காப்பாற்றப்படுகிறார் என்றும் கமல் அறிவித்துள்ளார்.