திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த மங்கலம் அருகே சடையனோடை கிராமத்தை சேர்ந்தவர் உத்தராசா(50). இவரது மனைவி கலையரசி(45). இருவரும் திருவண்ணாமலை அரசு கல்லூரியில் பேராசிரியர்கள். நேற்று முன்தினம் கல்லூரி விடுமுறை என்பதால், கலையரசி துணிகளை துவைத்து கம்பியில் உலர்த்த முயன்றார். அப்போது, வீட்டின் அருகில் இருந்த மின்கம்பி மீது ஈரத்துணிபட்டு கலையரசியை மின்சாரம் தாக்கியது.
இதனை கண்ட கணவர் உத்தராசா, மூத்த மகன் கிரீஸ்வரன்(17) ஆகியோர் ஓடி வந்து அவரை காப்பாற்ற முயன்றனர். அவர்களையும் மின்சாரம் தாக்கியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். கலையரசி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தந்தை, மகனுக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.