தீவைக்க விரட்டியவர் கோஸ்ட் ரைடராக பற்றி எரிந்த சம்பவம்..! தன்வினை தன்னை சுட்டது

தனது கடையில் இருந்து வெளியேற மறுத்த வாடகைதாரரை உயிரோடு எரிப்பதற்கு பெட்ரோலுடன் விரட்டிய உரிமையாளர் கை தவறி தனக்கு தானே தீவைத்துக் கொண்ட சம்பவம் திருச்சியில் அரங்கேறி உள்ளது.

திருச்சி காந்தி மார்க்கெட்டை சேர்ந்த ரங்கராஜ் என்பவர் தனக்கு சொந்தமான மாநகராட்சி கடையை ராஜா என்பவருக்கு 1 லட்சம் ரூபாய்க்கு உள் வாடகைக்கு விட்டுள்ளார்.

ரங்கராஜனின் தம்பிகள் ரங்கராஜனுக்கு தெரியாமல் மேலும் ஐந்து லட்ச ரூபாயை ராஜாவிடம் கூடுதலாக வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பேச்சுவார்த்தை சரியில்லை என்று தனது கடையை காலி செய்யுமாறு கூறி ராஜாவிடம் ஒரு லட்ச ரூபாய் திரும்ப கொடுத்துள்ளார் ரங்கராஜன்.

தம்பிகளிடம் ஐந்து லட்ச ரூபாய் கொடுத்துள்ளதாக கூறிய ராஜா, அந்த பணத்தையும் கொடுத்தால் மட்டுமே கடையை காலி செய்வேன், இல்லையென்றால் கடையை காலி செய்ய முடியாது என்று கூறியுள்ளார்.

அப்பொழுது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் ரங்கராஜன் , ராஜாவை கத்தியால் குத்தியதோடு, கையில் பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை ராஜா மீது ஊற்றி தீவைத்து கொளுத்துவதற்காக விரட்டி உள்ளார்

இதில் ராஜா தட்டி விட்டதில் ரங்கராஜன் மீது பெட்ரோல் தெரித்து ரங்கராஜன் மீது தீ பரவியது. தலையில் பற்றி எறிந்த தீயுடன் கோஸ்ட் ரைடர் போல ரங்கராஜன் அங்கும் இங்கும் ஓடினார்.

அப்போது அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து ரங்கராஜனை காப்பாற்றி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ராஜா மீது தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவின் கீழும், ரங்கராஜன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்து மார்க்கெட் காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

எந்த கடைக்காக அடித்து கொண்டார்களோ அந்த பிரச்சனைக்குரிய கடையை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.