தூத்துக்குடி: தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் உரையாற்றினார். இதில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக வாக்குச்சாவடி முகவர்கள், நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். இதில் அந்தந்த பகுதிகளில் இருந்து பங்கேற்ற மாவட்ட செயலாளர்களும் தங்கள் பகுதியில் நடந்து வரும் வாக்காளர் சேர்ப்பு உள்ளிட்ட பணிகள் குறித்து விளக்கினர். தூத்துக்குடி வடக்கு மாவட்டம், தூத்துக்குடி தொகுதி திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான கூட்டம் கலைஞர் அரங்கத்தில் நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் பங்கேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பகுதி செயலாளர்கள் நிர்மல்ராஜ், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், ஜெயக்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, சி.எஸ்.ராஜா, மாவட்ட மகளிரணி கஸ்தூரிதங்கம், லதா, மாவட்ட தொ.மு.ச செயலாளர் சுசீ ரவீந்திரன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த் கேபிரியேல்ராஜ், வர்த்தகரணி செயலாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், மருத்துவ அணி அருண்குமார், தொண்டரணி முருகஇசக்கி, இளைஞரணி சிவகுமார் என்ற செல்வின், சிறுபான்மை அணி அமைப்பாளர் சாத்ராக், மாணவரணி துணை அமைப்பாளர் பால்மாரி, தொமுச மரியதாஸ், மாவட்ட பிரதிநிதி சக்திவேல், மீனவரணி ஆர்தர் மச்சாது, தகவல் தொழில்நுட்ப அணி சுரேஷ்குமார், மார்க்கின் ராபர்ட், கவுன்சிலர்கள் சரவணக்குமார், கந்தசாமி, பொன்னப்பன், வட்டசெயலாளர்கள் டென்சிங், பாலு என்ற பாலகுருசாமி, சுரேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விளாத்திகுளம்: விளாத்திகுளத்தில் நடந்த தொகுதி திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். கூட்டத்திற்கு மார்கண்டேயன் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். கூட்டத்தில் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்குதல், திமுக வாக்கு வங்கியை அதிகரித்தால் பற்றி ஆலோசனை வழங்கப்பட்டது. ஒன்றிய செயலாளர்கள் விளாத்திகுளம் அன்புராஜன், சின்னமாரிமுத்து, ராமசுப்பு, செல்வராஜ் (புதூர் கிழக்கு), மும்மூர்த்தி(மேற்கு), ராதாகிருஷ்ணன்(புதூர் மத்திய), காசிவிஸ்வநாதன்(ஓட்டப்பிடாரம்), நவநீதகண்ணன்(கோவில்பட்டி கிழக்கு), பேரூர் செயலாளர்கள் வேலுச்சாமி, பாரதிகணேசன், மருதுபாண்டியன், விளாத்திகுளம் பஞ்சாயத்து தலைவர் அய்யன்ராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் வசந்தம்ஜெயகுமார், ராஜாகண்ணு, இளைஞரணி துணைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், டேவிட்ரவிராஜ் உட்பட தொகுதிக்கு உட்பட்ட வாக்குசாவடி முகவர்கள் பங்கேற்றனர்.